கோவில்பட்டியில் போட்டியிடும் டிடிவி தினகரன் !

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில்,தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் மேலும் 50 பேர் அடங்கிய இரண்டாவது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.