தி.மு.க கூட்டணியில் வி.சி.க 6 தொகுதிகளில் போட்டி !

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 6 தொகுதிகள் குறித்த பட்டியலை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்டார்.

அதன்படி வானூர், காட்டுமன்னார்கோவில், செய்யூர், அரக்கோணம், நாகை, திருப்போரூர் ஆகிய தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.