அட..நன்றியை இப்படி கூட சொல்லலாமா – கனடா !

கரோனா வைரஸ் தடுப்பூசிகள் சுமார் 5 லட்சம் டோஸ்களை கனடாவுக்கு இந்தியா அனுப்பியது.கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியுவும் பிரதமர் மோடியைப் பாராட்டும் போது, உலகமே கரோனா தொற்றை வெல்ல வேண்டுமெனில் அதற்கு இந்தியாவின் தடுப்பூசிப் பங்களிப்பு பெரிய அளவில் உதவுகிறது. மேலும் பிரதமர் மோடி பற்றியும் புகழ்ந்து பேசினார்.

தற்போது கனடாவில் , கிரேட்டர் டொராண்டோவில் பிரதமர் நரேந்திர மோடி படத்துடன் இந்தியாவுக்கும் மோடிக்கும் நன்றி தெரிவிக்கும் வாசகமான, “நன்றி! இந்தியா, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி.

கனடாவுக்கு கோவிட் 19 வாக்சின் அனுப்பியதற்கு நன்றி, லாங் லிவ் கனடா, இந்தியா உறவுகள்” என்று வாசகத்துடன் பெரிய பில்போர்டு ஒன்றை வைத்துள்ளது.