கரோனாவுடன் போராட டிரம்பிடம் திட்டங்கள் இல்லை: ஜோ பிடன்

அமெரிக்க அதிபர் டிரம்பிடம் கரோனாவுடன் போராடுவதற்கான திட்டங்கள் இல்லை என அமெரிக்க ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்தார்

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவ.,3 ம் தேதி நடக்க உள்ளது. இதனிடையே குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் இடையே இறுதி கட்ட விவாதம் நாஸ்வில்லேயில் நடந்தது.

விவாதத்தில் கலந்து கொண்ட டிரம்ப், ‘ அமெரிக்காவில் கரோனா இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. பல மாகாணங்களில் கரோனாதொற்று குறைந்து காணப்படுகிறது. விரைவில் கரோனா தடுப்பு மருந்து தயாராகி விடும். மருத்துவமனையில் இருந்த போது கரோனா தடுப்பு மருந்தினை பெற்றேன்’ இவ்வாறு தெரிவித்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த பிடன், ‘வரும் மாதங்களில் அமெரிக்காவில் மேலும் பலர் கரோனாவால் உயிரிழப்பார்கள். கரோனாவை எதிர்த்து போராட டிரம்பிடம் திட்டமிடல் இல்லை. கரோனாவை ஒடுக்க வேண்டும்; நாட்டினை அல்ல’ இவ்வாறு அவர் விவாதித்தார்.