சீனாவிடமிருந்து கரோனா தடுப்பூசி வாங்க மாட்டோம்: பிரேசில் உறுதி

சீனாவிடமிருந்து கரோனா வைரஸ் தடுப்பு மருந்தை வாங்கப் போவது இல்லை என பிரேசில் அதிபர் போல்சனோரா தெரிவித்துள்ளார்.

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ், இதுவரை 4.18 கோடி பேருக்கும் அதிகமானோருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. 11 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். கரோனா பாதிப்பில், தென் அமெரிக்க நாடான பிரேசில், 3வது இடத்தில் உள்ளது. பலி எண்ணிக்கையில் 2வது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 53 லட்சம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1.55 லட்சம் பேர் பலியாகி உள்ளனர்.

கரோனாவுக்கு தடுப்பு மருந்தை உருவாக்க, உலக நாடுகள் பலவும் தீவிரம் காட்டி வருகின்றன. பிரேசில், 46 மில்லியன் டோஸ் கரோனா தடுப்பு மருந்தை, சீனாவிடமிருந்து வாங்க முடிவு செய்திருந்தது. இந்நிலையில், சீனாவிடமிருந்து கரோனா தடுப்பு மருந்தை வாங்கப்போவது இல்லை என, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா தெரிவித்துள்ளார். பிரேசில் மக்கள் பரிசோதனைக்காக அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.