தமிழகத்தில் 27 ஆம் தேதி முதல் லாரிகள் ஸ்டிரைக்

தமிழகத்தில் வரும் 27 ஆம் தேதி முதல் லாரிகள் ஸ்டிரைக் துவங்கும் என்றும் ஒரு வெளிமாநில லாரிகள் கூட தமிழகத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் லாரி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் லாரிகளுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளைக் கண்டித்து வரும் 27 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.இந்த ஸ்டிரைக்கின் போது வெளி மாநில லாரிகள் ஒன்று கூட தமிழகத்திற்குள் நுழையாது என்று தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சண்முகப்பா தெரிவித்துள்ளார்.