தமிழ் சினிமாவின் தங்கமகன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் !

நடிகர் திலகம் என்று அழைக்கப்படுபவர் சிவாஜி கணேசன்.அக்டோபர் 1 1928 பிறந்த இவர் தமிழ் சினிமாவில் அசைக்கமுடிய ஒரு இடத்தை பிடிப்பார் என்று அன்று யாருக்கும் தெரியாது.

பராசக்தி படத்தில் அறிமுகமான இவர் பின்பு தமிழ் சினிமாவில் நடிப்பு என்றல் சிவாஜி என்ற பெயர் பெற்றார்.

சிவாஜி கணேசன் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

பராசக்தி, பாசமலர், கர்ணன், தில்லானா மோகனாம்பாள், வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், மனோகரா போன்ற இவரது படங்கள் இன்றளவும் சினிமாவில் ஒரு மைல் கல்லாக இருந்து வருகிறது.

இன்று கூட அந்த சினிமாவை பார்த்தால் பார்க்கும் ரசிகர்களை தன் வசம் ஆகிவிடுவார் நடிகர் திலகம்.இவரது நடை,பேச்சு,தமிழ் அனைத்தும் ரசிகர்களை ஈர்க்கும் சக்தி கொண்டது.