தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு !

கனமழைக்கு வாய்ப்பு
கனமழைக்கு வாய்ப்பு

வங்ககடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழக புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

மேலும், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தமிழ் சினிமாவின் தங்கமகன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் !