மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழகம் வருகை !

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை நாகர்கோவில் வருகிறார்.கேரளாவில் இருந்து ஹெலிகாப்டரில் நாகர்கோயில் வருகிறார்.திமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடும் என்று தெரிகிறது.

இந்த நிலையில் தேர்தல் குறித்து ஆலோசனை வழங்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை குமரி மாவட்டம் வருகிறார்.மேலும்,சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்யவுள்ளார்.

மேலும் அவர் அங்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்து மதியம் 2 மணியளவில் ஹெலிகாப்டரில் திருவனந்தபுரம் செல்கிறார்.