சென்னை உயர்நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் – வழக்கறிஞர் சங்கம் !

நாடு முழுவதும் ஜனவரி மாதம் முதல் கரோனா தடுப்பூசி பணி தொடங்கப்பட்டது.முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இந்நிலையில்,சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய, மாநில அரசுகளின் வழக்கறிஞர்கள் தவிர மற்றவர்கள் உயர்நீதிமன்றத்தில் நுழைய அனுமதி இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.வழக்கறிஞர்கள் அறை மீண்டும் மூடப்பட வேண்டும் என்று பதிவாளர் அறிக்கை வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மார்ச் 8 முதல் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.