டோல்கேட் ஊழியர்கள் ஸ்ட்ரைக் கட்டணம் செலுத்தாமல் செல்லும் வாகனங்கள் !

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் வாகனங்கள் கட்டணமின்றி கடந்து செல்கின்றன.

சுங்கச்சாவடி ஊழியர்களுக்கான கோரிக்கைகள் சென்னையில் நடந்த தொழிலாளர் வாரிய அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து ஐந்து சுங்கச்சாவடிகள் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால் வாகனங்கள் கட்டணமின்றி சென்று வருகிறது.நாமக்கல் கிருஷ்ணகிரி மேட்டுப்பட்டி தலைவாசல் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட ஐந்து சுங்கச்சாவடிகளிலும் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு செய்துள்ளதால் புறக்கணித்து வாகனங்கள் கட்டணமின்றி சென்று வருகிறது.