அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 57 நாட்களாக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த போராட்டத்தால் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கபட்டிருந்தது.மேலும் மாணவர்களில் கோரிக்கையை ஏற்று அரசு கட்டணம் நிர்ணயம் செய்து அரசு ஆணை வெளியிட்டது.
இந்நிலையில் நாளை முதல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை இயங்கும் என பல்கலைக்கழக பதிவாளர் ஞானதேவன் அறிவித்துள்ளார்.



