பட்ஜெட் குறித்து ப. சிதம்பரத்தின் கருத்து !

இந்த ஆண்டு வெளியிட்ட பட்ஜெட் குறித்த விவாதம் மாநிலங்களவையில் நடந்து வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் பேசியது, கடந்த 8 காலாண்டுகளாக இந்தியப் பொருளாதாரம் மந்தநிலையைச் சந்தித்து வந்தது.

கரோனா தொற்றுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே பொருளாதார மந்தநிலை வந்துவிட்டது.பொருளாதார ரீதியாக இருக்கும் பிரச்சினைகளை, சிக்கல்களைத் தீருங்கள் என்று உங்களிடம் நாங்கள் கேட்டுக்கொண்டோம்.

இரு விஷயங்களைச் செய்யுங்கள் என்று கூறினோம். ஒன்று மக்களின் கைகளில் நேரடியாகப் பணித்தை கொடுத்து செலவிடச் செய்யுங்கள், இரண்டாவது மலையாக உணவு தானியக் கிடங்குகளில் சேமித்துள்ள உணவு தானியங்களை இலவசமாக மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கிடுங்கள் என்றோம்.

இந்த பட்ஜெட் பணக்காரர்களால், பணக்காரர்களுக்காக, பணக்காரர்கள் வகுத்த பட்ஜெட் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றம் சாடியுள்ளார்.