வன்முறை தூண்டும் பதிவுகள் இடும் கணக்குகளை முழுமையாக நீக்கவில்லை ட்விட்டர் நிறுவனம் !

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றன.இந்த போராட்டம் குறித்து அனைவரும் தங்களது விருப்பு வெறுப்பைகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமூகவலைத்தளமான ட்விட்டரில் வன்முறையை தூண்டும் சில டிவீட்கள் இடம் பெறுகின்றன.மேலும் வன்முறை தூண்டும் உள்ளடக்கம் அடங்கிய ட்விட்டர் கணக்குகளை முடக்குமாறு ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு ஆணையிட்டது.

அவ்வாறு பதிவிட்ட 700 கணக்குகளை மட்டும் ட்விட்டர் நீக்கி உள்ளது.மேலும் தனிநபர் உரிமையை மீறி பதிவிடும் கணக்குகளை ட்விட்டர் நீக்க மறுக்கிறது.மேலும் அரசின் உத்தரவை மீறி ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.