இந்திய மகளிர் ஹாக்கி அணி போராடி தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி அணி வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி போராடி தோல்வி தழுவியது.

கிரேட் பிரிட்டன் அணி 4-3 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது. இந்திய கோல் கீப்பர், புதிய சுவர் சவிதா புனியா மைதானத்திலேயே அழுதுவிட்டார்.

வென்றிருந்தால் புதிய வரலாறு படைத்திருக்கும், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று முதல் வரலாறு படைத்திருக்கும். ஆனால் என்ன செய்வது கோல் கீப்பர் சவிதா புனியா பயங்கரமாக தடுப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தினார், ஒரு 8-9 கோல் ஷாட்களையாவது தடுத்திருப்பார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பதக்கம் கைநழுவிப் போனது.