ஜி.பி.முத்து மீது நடிகர் காதல் சுகுமார் கொலை மிரட்டல் புகார்

தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வரும் யூடியூபர் ஜி.பி முத்து உள்ளிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி “காதல்” பட சுகுமார் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

துகுறித்து பேசியுள்ள அவர், கொரோனா காலகட்டத்தில் குழந்தைகள் அனைவரும் ஆன்லைன் மூலமாக தான் படித்து வருகின்றனர். குழந்தைகளை நல்வழியில் கொண்டு செல்லும் விதமாக சமூகவலைதளத்தில் ஜி பி முத்து, இலக்கியா, ரவுடிபேபி உள்ளிட்ட நபர்கள் ஆபாசம் நிறைந்த வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக என்னுடைய நண்பர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார், மேலும் இது தொடர்பாக நானும் ஊடகங்களில் பேசியிருந்தேன். நான் பேசிய கருத்துக்களால் என்னை நெல்லை சங்கர், சேலம் மணி, ஜி பி முத்து போன்றவர்கள் தொடர்ந்து எனக்கு கொலை மிரட்டல் விடுத்து விடுக்கிறார்கள். கொலை மிரட்டல் விடுத்து வரும் இவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆபாசங்கள் நிறைந்த இவர்களின் சமூக வலைதள பக்கங்களில் தடை செய்யவும் வேண்டும் என்று கூறியிருக்கிறார் காதல் சுகுமார்.