பஜ்ரங் புனியா மல்யுத்தம் அரையிறுதிக்குத் தகுதி

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தம் 65 கிலோ எடைப்பிரிவு போட்டி காலிறுதியில் அபாரமாக வென்று இந்திய வீரர் பஜ்ரங் புனியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

அரையிறுதியில் அஜர்பெய்ஜான் மல்யுத்த வீரர் ஹாஜி அலியேவ் என்பவரை சந்திக்கிறார் பஜ்ரங் புனியா.

முன்னதாக பஜ்ரங் புனியா – அக்மாதிலீவ் இடையே 65 கிலோ உடல் எடைப்பிரிவு ஃப்ரீ ஸ்டைல் போட்டி நடைபெற்றது இதில் பஜ்ரங் முதலில் 2 புள்ளிகள் முன்னிலை பெற்று 3-1 என்று இருந்தார்.