டோக்கியோ ஒலிம்பிக் நிறைவு விழா !

டோக்கியோவில் உலக புகழ் பெற்ற ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வந்தன.இதில் இந்தியாவுக்கு 2 வெள்ளி, 4 வெண்கலம் ,1 தங்கம் என 7 பதக்கங்கள் கிடைத்துள்ளது.

இந்நிலையில் இரண்டு வாரங்களாக நடைபெற்று வந்த ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்தது.இந்த இறுதி விழாவில் பங்குபெற்ற நாடுகளின் கொடிகளின் அணிவகுப்பு, வெற்றியாளர்களுக்கு பதக்க விருதுகளை வழங்குதல், வெற்றி அணிவகுப்பு நடந்தது.

பின்னர், ஒலிம்பிக் கொடி இறக்கப்பட்டு, அடுத்து அதை நடத்தும் தேசத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இறுதியாக, ஒலிம்பிக் கொப்பரை அணைக்கப்பட்டது.இதன் முடிவில் 113 பதக்கங்கள் உடன் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.இதை தொடர்ந்து சீனா,ஜப்பான் நாடுகள் உள்ளன.