வாட்ஸ்அப் மூலம் கோவிட் தடுப்பூசி சான்றிதழை எவ்வாறு பெறுவது !

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில்,தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.மேலும் தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலமாக கொரோனா பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளமுடியும்.

தற்போது கோவிட் தடுப்பூசி சான்றிதழை அடுத்த நொடியே வாட்ஸ்அப் மூலம் பெறலாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.ஒரு மாநிலத்தில் இருந்து அடுத்த மாநிலத்திற்கு செல்லும் போது தடுப்பூசி சான்றிதழ்களை பல மாநிலங்கள் அரசுகள் வலியுறுத்துகின்றன.

கோவிட் தடுப்பூசி சான்றிதழை பதிவிறக்கம் செய்ய விரும்பும் எவரும் ஒரு எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்தியை அனுப்பலாம் மற்றும் அதைப் பெறலாம் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கோவிட் 19 தடுப்பூசி சான்றிதழை MyGov கொரோனா ஹெல்ப் டெஸ்க் மூலம் 3 எளிய படிகளில் பெறுங்கள். இதற்காக தொடர்பு கொள்ள வேண்டிய எண் +91 9013151515.இந்த எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் ‘covid certificate’ என டைப் செய்து அனுப்பவும். பிறகு OTP ஐ பதிவு செய்யவும்.உங்கள் சான்றிதழை நொடிகளில் பெறுங்கள்.