சிவகார்த்திகேயனுடன் நம்ம சிவாங்கி..டான் படக்குழுவினரின் புகைப்படங்கள் !

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார்.சின்னத்திரை மூலம் பெரியத்திரைக்குள் நுழைந்து கலக்கிவருபவர்.மேலும் சிவாங்கி விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்.

அதற்கு பின் வந்த குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இவரது சுட்டித்தனமான குணத்தின் மூலம் தமிழ் மக்கள் மனதில் இடம்பிடித்தவர்.இப்போது சிவாங்கியை தெரியாதவர்கள் யாரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு வந்துள்ளார்.

சிபி சக்ரவர்த்தி என்ற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் ‘டான்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.சிவகார்த்திகேயன் இந்த படத்தை தயாரிக்கிறார் .

லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் வெளியிட உள்ளனர். மேலும் இதில் பிரியங்கா அருள் மோகன், சூரி, சிவாங்கி, காளி வெங்கட் நடிக்கிறார்கள்.இந்நிலையில் சிவகார்த்திகேயன் சிவாங்கி, ப்ரியங்கா அருள், பாலா சரவணன், ஆர்ஜே விஜய் உள்ளிட்ட டான் படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.