தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் வழிமுறைகள் குறித்து ஆலோசனை !

international-institute-of-tamil-studies-announcement-regarding-admission-with-scholarship
தமிழக பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தமிழகத்தை வெகுவாக பாதித்தது.இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில்,பள்ளிகளை திறக்க மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தது.இந்நிலையில்,இந்தியாவில் முதல் மாநிலமாக பஞ்சாப் மாநிலம் பள்ளிகளை திறக்க உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து கர்நாடகா மாநிலமும் 50 சதவீத மாணவர்கள் வருகையுடன் திறப்பதாக அறிவித்தது.தற்போது தமிழகத்தில் செப்டம்பர் 1 ம் தேதி 9 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கான,செயல்பாட்டு வழிமுறைகள் குறித்த கூட்டம் நாளை நடைபெற உள்ளது.இந்த கூட்டத்தில் முதல்வருடன் ஆலோசித்தபின் பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.