காங்கிரஸ் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி காலமானார் !

தமிழகத்தின் காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி காலமானார்.அவருக்கு வயது 84 .இவரது மறைவிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இறுதி அஞ்சலி செலுத்தினார்.ராமமூர்த்தி தனது மகனுடன் பனையூரில் சென்னை அருகே ஈசிஆரில் தங்கியிருந்தார்.

மேலும் இறுதிச் சடங்குகளுக்காக ராமமூர்த்தியின் உடல் அவரது சொந்த ஊரான திண்டிவனம் நகரத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.முன்னாள் முதல்வர் காமராஜின் மீது இருந்த அன்பு காரணமாக காங்கிரசில் சேர்ந்த ராமமூர்த்தி மாணவர் காங்கிரசில் தீவிரமாக இருந்தார்.

எம்.எல்.ஏவாகவும், எம்.பியாகவும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராகவும் பல ஆண்டுகள் அரசியலில் இருந்துள்ளார்.இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக காலமான திண்டிவனம் ராமமூர்த்திக்கு காங்கிரஸ் தலைவர்கள் ,அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.