கலைக்கூடமாக மாறிய கழிவறை !

நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் பயன்பாட்டில் இல்லாத கழிவறை கட்டடத்தை நகராட்சி அலுவலகம், கலைக்கூடமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.இந்தப் புகைப்படக் கண்காட்சியை நேற்று திறந்து வைத்த மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்ரியா சாஹூ, அங்கிருந்த புகைப்படங்களையும் பார்வையிட்டார். இந்தக் கண்காட்சி தொடர்ந்து இருபது நாள்கள் நடைபெறும்.இந்த நிகழ்வையொட்டி, தானியங்கி நூலகத்தையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்ரியா சாஹூ தொடங்கி வைத்தார்.