பாலிவுட்டில் அறிமுகமாகும் தென்னிந்திய நடிகை

வெப் சீரிஸ் தொடர்கள், சொந்த தயாரிப்பில் புதிய படம் ஆகியவற்றைத் தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் அடியெடுத்து வைக்கும் அடுத்த தென்னிந்திய நடிகையாக உருவெடுத்துள்ளார் நடிகை அமலாபால்.

தனது சொந்த தயாரிப்பில் உருவாகும் ‘கடாவர்’ (cadaver) என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் அமலாபால். தற்போது அந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் தீவிரமாக நடந்துவருகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

சமீபத்தில் தனது நடிப்பில் எந்த படங்களும் ரிலீசாகாத போதிலும் தனது வித்தியாசமான கவர்ச்சி படங்களை சமூக வலைத்தளபக்கத்தில் பதிவேற்றி, தன் மீது இருக்கும் வெளிச்சம் எப்போதும் விலகாதவாறு பார்த்துக் கொண்டு வருகிறார் அமலாபால்.

சினிமாவுக்கு வந்த புதிதில் முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்க போட்டா போட்டி போட்ட அவர், தற்போது தேர்ந்தெடுத்து நடிக்கும், கதைகளும், கதாபாத்திரங்களும் அவரின் மதிப்பையும், நட்சத்திர அந்தஸ்தையும் உயர்த்தியுள்ளது.

நேர்த்தியான, தரமான கதைகள், கனமான கதாபாத்திரங்கள் என ரசிகர்கள் கொண்டாடும் கதாப்பாத்திரங்களை தொடர்ந்து வெப்சீரிஸ்களிலும், திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.