இன்றைய பெட்ரோல் விலை

கடந்த பிப்ரவரி மாதம் 27-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 93 ரூபாய் 11 காசுக்கும், டீசல் 86 ரூபாய் 45 காசுக்கும் விற்பனை ஆனது. இது தான் அதிகபட்ச பெட்ரோல், டீசல் விலையாக பேசப்பட்டது.

அதன்பின்னர், பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் நீடித்து வந்தது. தமிழகத்தில் தேர்தல் நேரமாக இருப்பதால் பெட்ரோல், டீசல் மாற்றம் இல்லாமல் இருந்து வருவதாக கூறப்பட்டது.


இதற்கிடையில் சில தினங்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 16 காசு குறைந்திருந்தது. கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு பிறகு, அதன் விலை குறைந்து காணப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னையில் கடந்த 4 நாட்களாக  விலை மாறாமல் இருந்த பெட்ரோல், டீசலின் விலை நேற்று சற்று குறைந்தது. 


இதையடுத்து இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.92.58க்கும், டீசல் விலை ரூ.85.88க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.