நான் கூட மாஸ்க் அணியவில்லை- மு.க.ஸ்டாலின்

ஜல்லிக்கட்டின் நிஜ நாயகர்கள் இளைஞர்கள்தான்‌, இதில் எந்த அரசியல் தலைவர்களுக்கு பங்கு இல்லை என்றும், ஜல்லிக்கட்டு நாயகன் ஓபிஎஸ், மோடி என்று கூறி கொச்சைப் படுத்தாதீர்கள் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மேலும் தமிழகத்தில் மீண்டும் கொரோனா இரண்டாம் அலை உருவாக உள்ளது. ஆனால் மக்கள் யாரும் கவலைப் படுவதில்லை. இங்கு உள்ளவர்கள் யாரும் மாஸ்க் போடவில்லை ‌.வேட்பாளர்களும் அணியவில்லை. ஏன் நான் கூட அணியவில்லை தான்‌‌. இருந்தாலும் நான் தனியாக நிற்கிறேன்.

ஆனால் நீங்கள் எல்லாம் கூட்டமாக நிற்கிறீர்கள். தயவு செய்து விதிமுறைகளை பின்பற்றுங்கள். தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். அது உடலுக்கு நல்லது ‌.நான் ஏற்கனவே போட்டுள்ளேன்.

போடியில் மாம்பழக் கூழ் தொழிற்சாலை, கேரள அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி கண்ணகி கோட்டம் சீரமைக்கப்படும். தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இதய தமனி அறுவைச் சிகிச்சை மையம் ஏற்படுத்தப்படும். தேனியில் திராட்சை கிட்டங்கு, முருங்கைக்காய் கிட்டங்கு உள்ளிட்ட தேனி மாவட்ட மக்களின் கோரிக்கைகள் ஐந்தாண்டுகளில் நிறைவேற்றப்படும்.