மமதையால் ஆளும் கட்சி என் மீது வழக்கு போடுகிறது- டிடிவி

பதவி படுத்தும் பாடு அதிகார மமதையால் ஆளும் கட்சி என் மீது வழக்கு போடுகிறது என்றும் திமுகவுக்கு தேர்தலில் தோல்வி பயம் வந்துவிட்டதால் தபால் வாக்கிற்கு பணம் கொடுத்துள்ளனர் எனவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேவகோட்டையில் தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறினார்.

மேலும், ஆளுங்கட்சி தலைமையிலான கூட்டணி, பணத்தை மட்டும் நம்பியே தேர்தலை சந்திக்கிறது. துரோகி என்று சொன்னதற்கு என் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். பழனிச்சாமியை பல்லி, பாம்பு இல்லை.

நீங்கள் பச்சோந்தி என்றும், மேலும் பழனிசாமி எனது பெயர் பழனிசாமி இல்லை பொய் சாமி என்றும் கூட கூறுவார் என விமர்சித்தார். பணம் படுத்தும் பாடு இருக்கே பதவி, அதிகார மமதையால் என் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆறு ஏரி குளங்களை தூர்வாரினார்களோ? இல்லையோ? தமிழ்நாட்டு கஜானாவை காலி செய்து விட்டனர்.

திமுகவை நம்பியவர்கள் தெருவில்தான் நிற்க வேண்டியது வரும். தப்பித்தவறி ஸ்டாலின் முதல்வரானால் கஜானாவில் ஒன்றுமில்லை, எனவே பொதுமக்கள் சொத்துக்களையும் எடுத்துச் சென்றுவிடுவார்கள். பத்து வருடமாக ஆட்சியில் இல்லை மக்களை சுரண்ட வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர் என விமர்சித்தார்.