இன்றைய சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது!

இந்தாண்டின் இரண்டாவதும், கடைசியுமான சூரிய கிரகணம் இன்று (டிச.14) நிகழவுள்ளது.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு கடந்து செல்லும்போது சூரியன் மறைக்கப்படும். அப்போது நிலவின் நிழலானது பூமியின் மேற்பரப்பின் மீது விழும். இதனைச் சூரிய கிரகணம் என்கிறோம்.

அதன்படி இன்று இந்தாண்டின் இரண்டாவதும், கடைசியுமான சூரிய கிரகணம், இன்று (டிச.14) நிகழவுள்ளது. இந்த கிரகணம் 2 நிமிடங்கள் 10 வினாடிகள் வரை முழுமையாக நிகழவுள்ளது. அது டிச.14ஆம் தேதி மாலை 7:03 மணிக்கு தொடங்கி டிச.15ஆம் தேதி நள்ளிரவு 12:23 மணி வரை நீடிக்கும்.