இன்றைய பங்குச்சந்தை நிலவரம் !

sensex and nifty
இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

இன்றைய பங்குச்சந்தை முடிவில் பிஎஸ்இ எஸ் அண்ட் பி சென்செக்ஸ் 585 புள்ளிகள் அல்லது 1.17 சதவீதம் குறைந்து 49,217 ஆக இருந்தது.மற்றும் நிஃப்டி 50 163 புள்ளிகள் அல்லது 1.11 சதவீதம் குறைந்து 14,558 ஆகவும் இருந்தது.

நிஃப்டி மெட்டல் மற்றும் எஃப்எம்சிஜி தவிர, தேசிய பங்குச் சந்தையில் மற்ற அனைத்து துறை குறியீடுகளும் குறைவாக காணப்பட்டது.

மேலும் நிஃப்டி ஐடி 3 சதவீதமும், பார்மா 2.2 சதவீதமும், பொதுத்துறை நிறுவனம் 1.7 சதவீதமும், தனியார் வங்கி 1.2 சதவீதமும் சரிவுடன் காணப்பட்டது.

இன்றைய பங்குகளில், எச்.சி.எல் டெக்னாலஜிஸ் 3.5 சதவீதம் சரிந்து ஒரு பங்கிற்கு 953.15 ரூபாய்யாக இருந்தது. இன்போசிஸ் 3.2 சதவீதமும், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 2.3 சதவீதமும், விப்ரோ, டெக் மஹிந்திரா தலா 2 சதவீதமும் சரிந்தன.