12 ராசிகளுக்கும் இன்றைய ராசிபலன் !

மேஷம்

மாணவமணிகள் அரசு சம்மந்தப்பட்ட பணிகளுக்காக நீங்கள் தேர்வுகள் எதுவும் எழுதியிருந்தால் அதில் வெற்றி கிடைக்கும். மனதிற்குரிய சம்பவங்கள் நடக்கக் கூடும்.முயற்சிகளில் தடை ஏற்படலாம்.இன்று பெண்களுக்கு மனக்கவலை ஏற்படலாம்.

ரிஷபம்

உங்கள் பணிகளில் பல குறுக்கீடுகள் வந்தாலும் அதை சாமர்த்தியாமாக சமாளித்து வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் வேலை பார்த்து வரும் அன்பர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும்.

மிதுனம்

இன்று குடும்பத்தை பொறுத்தவரை நல்ல முன்னேற்றமான வாரம்அறிவு திறமை வெளிப்படும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். அடுத்தவர்களின் குற்றச்சாட்டுக்கு ஆளாகநேரிடலாம் கவனம் தேவை.

கடகம்

உத்தியோகத்தில் வேலைபார்த்து வரும் இடத்தில் தங்களுக்கு எதிராக செயல்பட்டு வந்தவர்களின் பலம் குறைந்து தங்கள் கை ஓங்கி நிற்கும். மற்றவர்கலின் ஆதரவும் கிட்டும்.தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருக்கும்.

சிம்மம்

இன்று தொழிலைப் பொறுத்த் வரையில் சக பாகஸ்தர்களினால் வீண் பிரச்சினைகல் ஏற்படக்கூடும்.வாடிக்கையாளர்களிடம் சாமர்த்தியமாக பேசுவதன் மூலம் வியாபாரம் வளர்ச்சி பெறும். அடுத்தவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்கும் போது கவனம் தேவை.

கன்னி

இன்று குடும்பத்தில் வாக்குவாதத்தையும், கோபத்தையும் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்வது நல்லது. பெண்மணிகளுக்கு மன உறுதி அதிகரிக்கும்.

துலாம்

ஆரோக்கியத்தில் சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் உடனடியாக சரியாகும். செய் தொழிலில் லாபம் கிடைக்கும், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். 

விருச்சிகம்

இன்று எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மை தரும். அடுத்தவர் கூறும் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதில் உள்ள நல்லது கெட்டதை யோசிப்பது நல்லது. பண விவகாரங்களில் கவனம் தேவை.

தனுசு

இன்றைய தினம் பணவரவுகள் சிறப்பாக இருக்கும் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

மகரம்

செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கும் திறமைகேற்ப வேலை கிடைக்கும்.

கும்பம்

இன்றைய தினம் உங்கள் குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். தாராள தனவருவாய் அதிகரிக்கும். கடந்த இரண்டு நாட்களாக இருந்த பிரச்சினைகள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மீனம்

சந்திரன் இன்று உங்கள் ராசிக்குள் சஞ்சரிப்பதால் மனக்குழப்பம் இருந்தாலும் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். கணவன் மனைவியிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். எதிர்பாராத தனவரவு ஏற்படும்.