கலைஞரின் பிறந்தநாளை மாநில உரிமை நாளாக அறிவிக்க திருமாவளவன் கோரிக்கை !

கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை மாநில உரிமை நாளாக அறிவிக்க வேண்டும் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தமிழக அரசியல் வரலாற்றில் ஆழமான அடையாளத்தை ஏற்படுத்தியவர். கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் தமிழக அரசியல் வரலாற்றில் காலூன்றி நின்ற மாபெரும் தலைவராக போற்றப்பட்டவர்.

அண்ணா மறைவுக்குப் பிறகு தமிழகத்தின் முதல்வராக பதவியேற்ற அவர் தனது கடைசி காலம் வரை சமூக நீதி என்ற கோட்பாட்டை முன்னெடுத்துச் சென்றார்.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது,பெரியார்,அண்ணா பாசறையில் வளர்ந்தவர். மாநில உரிமைகளுக்கு அடித்தளம் அமைத்தவர்.

மேலும் கலைஞர்பிறந்தநாளை மாநில உரிமை நாளாக அறிவிக்குமாறு என்று வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.