இன்றைய ராசி பலன்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்தது நல்லவையாக நடைபெற வாய்ப்புகள் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் தேவையற்ற விஷயங்களைப் பற்றிய வாதங்களை தவிர்ப்பது நல்லது.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக அமைந்தாலும் பொருட் தேக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும் யோகமுண்டு. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்ததை நிறைவேற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். பல நாள் கனவுகள் நிறைவேறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை பிறக்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு மந்த நிலை காணப்படலாம்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் குழப்பங்கள் நீடிக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு உங்களுக்கு கீழ் பணிபுரியும் பணியாளர்கள் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது அதன் மூலம் முன்னேற்றம் காணலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு கிடைப்பதில் திருப்தி இருக்காது.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எந்த ஒரு முடிவையும் அவசரமாக எடுக்கக் கூடாது. நிறுத்தி நிதானத்துடன் செயல்படுவது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் தேவையில்லாத பிரச்சினைகள் வரலாம்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். தொலைதூர இடத்திலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கப்பெறும். இதுவரை உங்களுக்கு இருந்து வந்த கடன் தொல்லைகள் தீர்வதற்கான வழி பிறக்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு நினைத்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவனமுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவு ஏற்படும். சகோதர சகோதரிகளின் வழியே ஆதாயம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் ஒப்படைக்கப்படும். சுயதொழில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணவரவு ஏற்படுவதில் சிறப்பாக அமையும். பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை சமாளித்து விடுவீர்கள். வீட்டுத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்துவிடுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவ சகோதர சகோதரிகளின் ஒற்றுமை அவசியம் ஆகும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து விட்டு செல்வது நல்லது.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்தது நடக்கும் கேட்டது கிடைக்கும் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. வெளியூர் தொடர்பான விஷயங்களில் சில செய்திகள் கிடைக்கப் பெறும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்கள் உடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். சுய தொழிலில் போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூல பலன் கிடைக்கும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. நீண்டநாள் பாக்கிகளை வசூலிக்க கூடிய விஷயங்களில் பிரச்சனைகள் நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணவரவு சீராக இருக்கும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. மனதில் நினைத்த காரியம் ஒன்று நிறைவேறும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமையில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எதிர்கொள்ளும் தைரியம் பிறக்கும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்னைகள் நீங்கும். சுய தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காவிட்டாலும் முன்னேற்றத்தில் குறைவிருக்காது. பழைய கடன்கள் வசூலாகும். பெண்களுக்கு இறை வழிபாட்டில் ஆர்வம் மேலோங்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.