மேலும் அதிகரித்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை

LPG Cylinder
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.134 குறைப்பு

சென்னையில் சமையல் எரிவாயு  சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரித்து ரூ.835க்கு விற்பனை செய்யப்படுகிறது. சமையல் எரிவாயு  சிலிண்டர் விலை ரூ.810-லிருந்து ரூ.835 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த பிப்ரவரியில் மட்டும் ரூ.100 விலை உயர்ந்த நிலையில் மார்ச்சில் மேலும் ரூ.25 அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரியில் ரூ.710 ஆக இருந்த சமையல் எரிவாயு  சிலிண்டர் விலை ரூ.125 உயர்ந்து ரூ.835 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது சமையல் எரிவாயு  சிலிண்டர் விலை மேலும் ரூ.25 உயர்ந்துள்ளதால் ஒரு சிலிண்டரின் விலை ரூ.810-லிருந்து ரூ.835 ஆக அதிகரித்துள்ளது. இதற்கு இல்லத்தரசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.