கரோனா தடுப்பூசி முதல் டோஸ் பெற்றுக் கொண்டார் மோடி

தமிழகம் உட்பட நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் தொடங்கியது. முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. நாடு முழுவதும் சுமார் 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் 1.15 கோடி பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் முன்களப் பணியாளர்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

60 வயதைக் கடந்தவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்ற நிலையில், பிரதமர் மோடி காலையிலேயே எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார். பிரதமர் மோடிக்கு கோவேக்சின் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது.