ச.ம.க தலைவர் சரத்குமார் மற்றும் கமல் கூட்டணி குறித்து ஆலோசனை !

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் வரவுள்ளது.இந்நிலையில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அந்த வகையில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலை, ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் சமத்துவ மக்கள் கட்சி சரத்குமார் மற்றும் இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகிகளும் சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து சரத்குமார் கூறியது, அதிமுக கூட்டணியுடன் கடந்த பத்து ஆண்டுகளாக பயணித்துள்ளோம். அதிமுகவிலிருந்து கூட்டணி பற்றி யாரும் அழைத்துப் பேசவில்லை. மக்களுக்காக நாம் சேவை செய்ய வேண்டும் என்றால் ஏதாவது ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்பதாலும், கூட்டணி குறித்து அழைப்பு வராததால், அதிலிருந்து விலகியுள்ளேன்.

எண்ணங்கள் சரியாக இருப்பவர்கள் ஒன்றாக இணைந்தால் நன்றாக இருக்கும் என்று கருதியதால் கமலுடன் பேசினோம். கூட்டணி வெற்றி பெற்ற பிறகே முதல்வர் யார் என்பது முடிவு செய்யப்படும் என்று சரத் குமார் தெரிவித்துள்ளார் .