விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் !

பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் மூலம் 19 செயற்கைக் கோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.முதன்மை செயற்கைக் கோளான அமேசானியா 637 கிலோ எடையுடையது. இதன் ஆயுட்காலம் 4 ஆண்டுகள்.

இதில் இஸ்ரோ தயாரித்த சிந்து நேத்ரா, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் சதிஷ் சாட், சென்னை ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி, நாக்பூர் ஜிஎச் ரைசோனி பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி கூட்டமைப்பில் உருவான யுனிட்டிசாட் ஆகிய 5 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.

இந்த நிலையில் இன்று காலை 10.24 மணிக்கு 19 செயற்கை கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் தற்பொழுது வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது