பூசணி விதைகளின் மருத்துவ குணங்களை தெரிந்துகொள்ளுங்கள் !

பூசணி விதையில் ஏராமான வைட்டமின்களும் ஊட்டச்சத்துக்களும் இருக்கிறது.பொதுவாக நாம் சமைக்கும் பொது பூசணிக்காயின் விதைகளை சமையலுக்கு பயன்படுத்துவது இல்லை.இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.

பூசணி விதைகள் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை சரியான அளவில் பராமரித்து, சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும். ஆகவே உங்களுக்கு சர்க்கரை நோய் வராமல் இருக்க வேண்டும் என்று நினைத்தால், தினமும் ஒரு கையளவு பூசணி விதைகளை சாப்பிடுங்கள்.

பூசணிக்காய் விதைகள் நாம் உட்கொள்வதன் மூலம் சிறுநீரக பகுதி, இதயம் சம்பந்தப்பட்ட உறுப்புகள், மற்றும் ஒருசில புற்றுநோய் போன்ற விஷயங்களிலிருந்து நம்மைக் காக்கிறது.

உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற நினைப்பவர்கள் இதை சாப்பிடலாம்.பூசணி விதைகளை தினமும் ஸ்நாக்ஸாக சாப்பிட்டு வந்தால் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்க உதவும்.