மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. உங்களுக்கு வர இருக்கும் ஆபத்துகள் முன்கூட்டியே உங்களுக்கு தெரிய வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கைநழுவிப் போகும் என்பதால் கவனம் தேவை.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானம் தேவை. உங்கள் உடன் இருப்பவர்களே உங்களை புரிந்து கொள்ளாமல் துன்புறுத்துவார்கள். சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு திடீர் அதிர்ஷ்ட யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் மன அமைதி நிறைந்து இருக்கும்.
மிதுனம்:
தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய முதலீடுகள் செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவதற்கு போராட வேண்டியிருக்கும். பெண்கள் சுய மரியாதையை எதிர்பார்த்து இருப்பார்கள்.
கடகம்:
காலம் தாழ்த்தி சொல்லப்படும் சில விஷயங்கள் மூலம் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதிக்கான வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்ததை சாதித்து காட்ட கூடிய யோகம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் மன நிறைவுடன் செய்யும் பொழுது அதில் பலன்களும் அதிகம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் இடத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திடீர் அதிர்ஷ்ட யோகம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பண வரவு சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்துவிடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய முதலீடுகள் மூலம் அதிக லாபத்தை காணக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் சிறந்த முன்னேற்றத்தை காண்பீர்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் நினைத்த காரியங்கள் தடை இல்லாமல் நிறைவேறும் யோகம் உண்டு. மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுப செய்திகள் கிடைக்கப் பெறுவார்கள். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு அமையப் பெறும். வாகன ரீதியான பயணங்களின் மூலம் புதிய நட்பு வட்டம் விரியும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் நண்பர்களுடன் பேசும் வாய்ப்பு உருவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் பணியாளர்களின் ஆதரவை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கவிடாமல் இடைஞ்சல்கள் ஏற்படும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் நிதானத்துடன் செயலாற்றுவது நல்லது. கனமான பொருட்களை கையாளும் பொழுது எச்சரிக்கை தேவை.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்தது நடக்கும். ஒரு சில விஷயங்கள் எதிர்பார்த்த வற்றிற்கும் மேலாக நடைபெற இருப்பதால் ஆச்சரியப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களும், உத்தியோக ரீதியான பயணங்களில் கவனம் செலுத்துவது நல்லது. கணவன் மனைவி இடையே தேவையற்ற வாக்குவாதங்கள் தவிர்ப்பதன் மூலம் மன அமைதி காணலாம். ஆரோக்கியத்தில் வீண் விரயங்கள் ஏற்பட இருப்பதால் கவனம் தேவை.















