காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதி

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனையடுத்து, தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை உறுதி செய்யும் பணிகளில் தீவிரம் காட்டிவருகின்றன.

அ.தி.மு.கவைப் பொறுத்தவரை பா.ம.கவுடன் தொகுதிப் பங்கீட்டை நிறைவுசெய்துள்ளது. பா.ம.கவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கியுள்ளது. தே.மு.தி.க மற்றும் பா.ஜ.கவுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.

தி.மு.கவைப் பொறுத்தவரை ஏற்கெனவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள், இந்தியன் யூனியன் முஸ்லீம் கட்சிக்கு 3 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதி ஒதுக்கீட்டு கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது. அதன்தொடர்ச்சியாக தற்போது இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதி பங்கீட்டை உறுதி செய்துள்ளது. இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதற்கிடையில் காங்கிரஸுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தொடர்ந்து நீடித்துவருகிறது.