இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் !

இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன.

மே மாதம் இரண்டாவது வாரத்தில் பெட்ரால்- டீசல் விலை உச்சம் தொட்டன. பின்னர் சற்று குறைந்தது. இந்தநிலையில் பெட்ரால்- டீசல் விலை மீண்டும் உச்சம் தொட்டு வருகிறது.

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 95.99 ரூபாய், டீசல் லிட்டர் 90.12 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று பெட்ரோல் லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து லிட்டர் 96.23 ரூபாய் ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து 90.38 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.