கன்னட மக்களுக்கு மன்னிப்பு கூறிய கூகுள் !

இந்தியாவில் மோசமான மொழி எது என்பதற்கு ‘கன்னடம்‘ மொழி என விடையளித்த கூகுள் நிறுவனம் மன்னிப்பு கோரியது.கன்னடத்தை இந்தியாவின் “அசிங்கமான மொழி” என்று காட்டிய ஒரு தேடல் முடிவால் மக்களின் உணர்ச்சிகளை புண்படுத்தியதற்காக கூகிள் வியாழக்கிழமை கன்னட மக்களிடம் மன்னிப்பு கூறியுள்ளது.

இந்தியாவின் அசிங்கமான மொழி’ என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக இந்த முடிவு காட்டப்பட்டது.இதற்கு கர்நாடகா அரசு அதிருப்தி தெரிவித்தது.இந்நிலையில், இந்தியாவின் மோசமான மொழி கன்னடம் என காட்டப்பட்டதற்கு கூகுள் நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.

இதுகுறித்து கூகுள் நிறுவனம் விளக்கமளிக்கையில், கன்னட மொழி மோசமான மொழி என்பது கூகுளின் கருத்து இல்லை. இது போன்று கூகுள் தேடுதல் தளத்தில் எதிர்பாராத விதமாக நடந்து விடுகிறது.