இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் !

கரோனா தொற்று வந்த பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்த கொண்டே சென்றது..சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது.

இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை 15 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் 94.86 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் டீசல் விலை 15 காசுகள் உயர்ந்து லிட்டர் 88.87 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இந்த மாதம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்த வண்ணமே உள்ளது.