தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை அரசு அறிவித்துள்ளது !

தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை அரசு நிர்ணயித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கரோனா சிகிச்சை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


மருத்துவமனையின் தரத்தை பொறுத்து ஆக்சிஜன் இல்லாத படுக்கை வசதிக்கு ரூ.5000 முதல் 7000வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் படுக்கை வசதிக்கு ரூ.15,000, ஆக்சிஜன் படுக்கையுடன் தீவிர சிகிச்சைக்கு ரூ.25,000, தீவிர சிகிச்சை பிரிவில் வெண்டிலெட்டருடன் கூடிய சிகிச்சைக்கு ரூ.30,000 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.