தமிழகத்தில் இன்று முதல் கூடுதல் தளர்வுகள் !

கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு ஜூலை 12 வரை ஊரடங்கை அறிவித்துள்ளது .இந்த ஊரடங்கு காலத்தில் கொரோனா தொற்று நாள் பாதிப்பு குறைந்து வருகிறது.

தமிழகத்தில் இன்று முதல் கூடுதல் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் உள்ள உணவகங்களில் காலை 6.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை, உரிய காற்றோட்ட வசதியுடன், நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.

உடற்பயிற்சிக்கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் உரிய காற்றோட்ட வசதியுடன், ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

தகவல் தொழில் நுட்பம், தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்கள் 50 % பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படும்.

அனைத்து வழிபாட்டுத் தலங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை.

அனைத்து துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள், உரிய காற்றோட்ட வசதியுடன், ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.வணிக வளாகங்கள் காலை 9.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் 50% இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும். வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் மற்றும் விளையாட்டுக் கூடங்களுக்கு அனுமதி இல்லை.

தேநீர் கடைகளில் நிலையான வழிகாட்டு முறைகளைப் பின்பற்றி, ஒரு நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்கள் தேநீர் அருந்த அனுமதிக்கப்படுவர்.