தமிழக ஊரடங்கில் இவற்றுக்கெல்லாம் தடை நீட்டிப்பு !

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஜூலை 12 வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது.மேலும் தற்போது கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் சிலவற்றிற்கு தடையை நீட்டித்துள்ளது.

மாநிலங்களுக்கிடையே பேருந்து போக்குவரத்து தடை நீட்டிப்பு,திரையரங்குகள் திறக்க அனுமதி இல்லை,மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்து தடை நீட்டிப்பு.

நீச்சல் குளங்களுக்கு அனுமதி இல்லை,பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள்,பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள்,பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட அனுமதி இல்லை,திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை.

உயிரியல் பூங்காக்கள் திறக்க அனுமதி இல்லை,நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்,இறுதிச் சடங்குகளில், 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.