நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

2021ஆம் ஆண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றுடன் அவகாசம் முடிவடைகிறது.

மேலும், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வு நடக்கும் நகரங்களின் எண்ணிக்கை 155ல் இருந்து 198 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசு கல்லூரிகளில் சேர விண்ணப்பம் பதிவு செய்வதற்கான கால அவகாசமும் இன்றுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.