குரங்கை விழுங்கிய மலைப்பாம்பு மீட்பு

குஜராத் வதோதராவில் உள்ள ஒரு சிறிய ஆற்றில் 10 அடி நீளமுள்ள மலைப் பாம்பு ஒன்றை அம்மாநில வனத்துறை அலுவலர்கள் நேற்று மீட்டுள்ளனர்.

வனத்துறை அலுவலர் சைலேஷ் ராவல் கூறுகையில், ‘ஆற்றங்கரையில் மலைப்பாப்பு ஒன்று இரையை விழுங்கிய நிலையில் நகர முடியாமல் இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்று விசாரித்த போது, அந்த பாம்பு குரங்கை விழுங்கியது தெரியவந்தது.

பாம்பை வனத்துறை அதிகாரிகள் மீட்டனர். விழுங்கிய குரங்கை அந்த பாம்பு வாந்தி எடுத்தது. தற்போது, நல்ல உடல்நலையில் உள்ளது. அனுமதி பெறப்பட்ட பிறகு, ஜம்புகோட வனவிலங்கு சரணாலயத்தில் மலைப் பாம்பு விடப்படும்’ என்றார்.