இன்றைய ராசி பலன்

மேஷம்:

அன்பர்களுக்கு இனிமையான நாள் ஆகும். பொருளாதாரப் பற்றாக்குறை வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். காதல் வலையில் விழுந்து இருப்பவர்களுக்கு பல நல்ல நிகழ்வுகளும் சந்திப்புகளும் உண்டு. கணவன் மனைவி உறவு நன்றாக இருந்து வரும்.

ரிஷபம்:

நேயர்களுக்கு இன்றைய நாள் நன்மை தரும் நாளாகவே இருக்கும். கணவன் மனைவி உறவு அன்னியோன்னியமாக இருக்கும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் தவிப்பீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுனம்:

உங்களை மட்டம் தட்டியவர்கள் முன் மீண்டும் நீங்கள் யார் என்பதை தெரிவிக்க முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் மட்டும் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவராக எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவ அனுசரித்து செல்வது நல்லது.

கடகம்:

நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்கள் வெற்றியில் முடியும். திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டியது வரலாம். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும் மனமகிழ்ச்சியும் உண்டாக வாய்ப்பு உண்டு.

சிம்மம்:

நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றமான நாள் ஆகும். பொறியியல் தொடர்பான கல்வி படித்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

கன்னி:

பேச்சில் நிதானம் தேவை. மற்றபடி உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு கடின உழைப்பு கொடுக்கும் நாள் என்றாலும் நிர்வாகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு வேலையாட்கள் மற்றும் வாடிக்கையாளர்களால் சற்று உணர்ச்சிவசப்படக் கூடிய நிலைகள் உண்டாகலாம். மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் தேவை.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய பலம் எது என்பதை தெரிந்து செயல்பட முயற்சி செய்வீர்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் தேவையில்லாமல் மன சஞ்சலத்தை ஏற்படுத்துவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. ஆரோக்கிய ரீதியாக பிரச்சனைகளை சமாளிக்க உணவு கட்டுப்பாடும் மேற்கொள்வது நல்லது.

விருச்சிகம்:

சகோதர சகோதரிகள் வழியில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களை மதித்து நடந்தால் தான் நல்லது நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலை பளு அதிகரிக்கும் சாத்தியக் கூறுகள் உண்டு.

தனுசு:

தகுதியான நபர்களிடம் ஆலோசனை பெற்று முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த நெருக்கம் குறைவது வாய்ப்புகள் உண்டு.

மகரம்:

நீண்டநாள் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை நீங்கி லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் தேவை என்பதால் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. பிள்ளைகள் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும்.

கும்பம்:

கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும் என்றாலும், குடும்பத்தில் உள்ள மற்றவர்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு தீர வாய்ப்பு உள்ளது. விட்டுக் கொடுத்து அனுசரித்துப் போவது குடும்ப நிம்மதியைப் பாதுகாக்கும். வயதானவர்களுக்கு உடல் நலத்தில் சில பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும்.

மீனம்:

நண்பர்களுக்கு இந்த நாள் இனிய நாள் ஆகும். இதனால் உங்கள் திறமை பளிச்சிடும் மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும். அக்கவுண்ட்ஸ் தொடர்பான கல்வியில் இருப்பவர்கள் ஏற்றம் பெறுவார்கள். கணவன் மனைவி உறவு நன்றாக இருந்துவரும். குடும்பத்தில் அமைதி தவழும்.