இன்றைய பெட்ரோல் விலை நிலவரம்

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 91.45 ரூபாய், டீசல் லிட்டர் 84.77 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 23 காசுகள் அதிகரித்து 91.68 ரூபாய் எனவும், டீசல் விலை லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து 85.01 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.இதனிடையே இணையத்தில் பெட்ரோல் விலை உயர்வு தொடர்பான மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றது.