இன்றைய ராசி பலன் !

Today horoscope
ராசி பலன்

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சேமிப்பு பணம் தக்க சமயத்தில் உதவும்.இன்று, உங்கள் நெருங்கிய மற்றும் அன்பானவர்களுடன் சிறிய பயணம் செல்ல வாய்ப்புள்ளது.ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சி உண்டாகும்.வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சொல்லும் அறிவுரைகளை கேட்டு நடக்கவேண்டும்.குழைந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவர்.

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.இன்று ஒரு நல்ல செய்தி உங்களை தேடி வரும்.நீண்ட நாள் எதிர்ப்பார்த்த ஒன்று நடக்கும்.மனதை எப்பொழுதும் அமைதியாக வைத்து கொள்வது மிக நல்லது.

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நெருங்கிய உறவினர் உங்களை சந்திக்க வாய்ப்புள்ளது.ஒரு வழக்கில் சட்டத் தடைகளைத் தாண்டுவதற்கு சிறிது காலம் எடுக்கலாம்.உங்கள் சொத்துக்களில் சட்டச்சிக்கல் இல்லாமல் பாத்துக்கொள்வது மிக நல்லது.

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நண்பர்களுடன் உல்லாச பயணம் செய்யலாம்.வேலைச்சுமை அதிகமாக இருக்கும்.உடல்பயிற்சி மூலம் ஆரோக்கியத்தை அடையலாம்.

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களிடம் கடன் வாங்கியவர் திருப்பி கொடுப்பர்.மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர்.வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் செய்யும் முயற்சி அனைத்தும் வெற்றி பெரும்.குடும்பத்தில் அமைதி காப்பதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவரை அணுகவும்.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வேலையில் கவனம் தேவை.ஒரு நண்பரின் உதவி மூலமாக எதிர்பார்த்த வேலையை செய்து முடிப்பீர்கள்.ஒருவரின் இடத்தில் அதிகமாக தங்குவதன் மூலம் விரும்பத்தகாத விருந்தினராக மாறாதீர்கள்.

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கல்வியில் மாணவர்கள் நல்ல நிலையை அடைவார்கள். உயர்கல்விக்கு திட்டமிட்டு கொண்டிருப்பவர்கள் தங்கள் எண்ணம் வெற்றி பெற காண்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனநிம்மதி உண்டாகும்.

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீண் பேச்சால் பிரச்சனைகள் உண்டாகும்.எதிலும் நிதானம் தேவை.கடின உழைப்பு தேவை.நண்பர்களுடன் சிறிய பிரச்சனை வந்து போகலாம்.

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்தது நடக்கும்.குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.ஆரோக்கியத்தில் கவனம் தேவை.மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர்.

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வேலையில் பாராட்டுகளை பெறுவீர்கள்.சம்பள உயர்வு கிடைக்கும்.ஜிம்மில் சேருவதன் மூலம் உங்கள் உடற்பயிற்சி மேம்படும்.சிறிய பயணம் செய்வதன் மூலம் மனதில் மகிழ்ச்சி தோன்றும்.